SHARE THIS NEWS please, THANK YOU
............................

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களில் இருந்து பிரிந்து சென்றமையால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. சுமார் 300தமிழ் கிராமங்கள் தமிழ் பெயரைக்கொண்ட கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக முஸ்லிம் பெயர்களைக்கொண்ட கிராமங்களாக மாறிவிட்டன என  வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்றே அழைத்து வந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் தங்களை வேறுபடுத்திகாட்ட முற்பட்ட நிலையிலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் பிரியும் நிலையேற்பட்டது என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டட மகிழுர் கண்ணகிபுரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

MT4 Platforms

More from my site 00447536707793 வன்னி மைந்தன்