ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு

ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

MT4 Platforms

இதற்கிடையே, சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து வரும் 15-ம் தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என கூறினார்.

இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் - வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு
ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு

வடசென்னை தொகுதியில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார்.

விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.