வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்?

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்?

ஏற்கனவே ஒரு நடிகரை காதலிக்கும் இளம் நடிகை ஒருவரின் பெயர் தற்போது வேறு ஒருவருடன் சேர்ந்து அடிபடுகிறது. அழகும், திறமையும் வாய்ந்த நடிகை அவர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரும் இளம் நடிகர் ஒருவரும் காதலிப்பது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஜோடிபோட்டு ஊர் சுற்ற இருவரின் கெரியரும் அடிவாங்கத் தொடங்கியது. இதையடுத்து கெரியர் நல்லபடியாகும் வரை அடக்கி வாசிப்பது என்று அவர்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தார்களாம். அந்த முடிவுக்கு பிறகு இருவரும் ஜோடியாக சுற்றுவது இல்லை. நடிகர் நடிகரின் கெரியர் பிக்கப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகையின் கெரியர் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவரும் தனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கேட்டு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை. இரண்டாவது ஹீரோயினாக நடிக்கச் சொன்னாலும் நடிக்கிறேன் என்ற அளவுக்கு நடிகை இறங்கி வந்துவிட்டாராம். பாவம், அவர் கெரியர் அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. நடிகை நடிகைக்கும் வேறு ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக தற்போது பேச்சு கிளம்பியுள்ளது. இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியதை பார்த்த பிறகே இந்த காதல் கிசுகிசு கிளம்பியுள்ளது. அப்படி என்றால் அந்த நடிகரின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நடிகை, ஒரு ஆணுடன் சேர்ந்து ஊர் சுற்றினால் காதலராகத் தான் இருக்க வேண்டுமா, நண்பராகக் கூட இருக்கலாமே என்று நடிகையின் நலம் விரும்பிகள் சமாளிக்கிறார்கள். திருமணம் நடிகை தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தனது காதலரான அந்த நடிகரிடம் கூறினால் கூட அது உடனே நடக்க வாய்ப்பில்லை. நடிகர் தன் கெரியரில் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் அவர் திருமணம் செய்ய மாட்டார். அவர் குடும்பத்தாரும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் நடிகையின் பெயர் வேறு ஒருவடன் அடிபடுகிறது. வாய்ப்பில்ல ராஜா நடிகையின் மீது வேறு ஒரு இளம் நடிகருக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அவரும் தற்போது கெரியரில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தற்போதைக்கு காதல், திருமணம் பற்றி யோசிக்கக் கூட நேரம் இருக்காது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.