வெயிலில் உருகும் கார்கள் – ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் கார்கள் – ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்

சவுதி அரேபியாவில் சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் உருகுவதாக வைரலாகும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை பின்னணியை பார்ப்போம்.

சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் கார்கள் – ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்

MT4 Platforms

சவுதி அரேபியாவில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உருகியதாக ஃபேஸ்புக் பதிவுகள் வைரலாகி இருக்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியாவில் வெப்பநிலை அதிகபட்சமாக 52 டிகிரி பதிவானதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் கார்கள் உருகியதாக கூறும் பதிவினை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் பதிவுடன் உருகிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இரண்டு கார்களின் புகைப்படங்களும் பகிரப்படுகிறது.

இணைய தேடலில் ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவு முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த பதிவுகளுடன் பகிரப்படும் புகைப்படங்கள் அமெரிக்காவின் அரிசோனாவில் எடுக்கப்பட்டதாகும். உண்மையில் இந்த கார்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானதாகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரிசோனாவில் இயங்கி வரும் உள்ளூர் செய்தி ஒன்றும் கூகுளில் பட்டியலிடப்படுகிறது. டக்சன் நியூஸ் நவ் அறிக்கையின் படி ஜூன் 19, 2018 இல் அரிசோனா பல்கலைக்கழத்தின் அருகில் கட்டிட பணிகள் நடைபெற்ற பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெயிலில் உருகும் கார்கள் - ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்

அந்த வகையில் கார்கள் சவுதி அரேபியாவில் வெயிலில் உருகவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.