விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் – கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு

விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் – கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு

கலகலப்பு’, பீட்சா',சூதுகவ்வும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் கருணாகரன்.

easy way earn money click here,greate account

சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா சமயத்தில் விஜய் ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கும் ட்விட்டரில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

இதில் ரசிகர்கள் சிலர் அவரை ஒருமையில் பேச அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் குட்டிக்கதையா என கேட்டு கருணாகரனும் விஜய்யை விமர்சித்தார். இந்த விவகாரம் கொலை மிரட்டல், கமி‌ஷனரிடம் புகார் என்று பரபரப்பானது. கருணாகரன் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்ததை அடுத்து சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் நீக்கினார்கள்.

கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சம்பவத்தில் தான் யாரையும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் ’நான் எப்போதும் யாரையும் வெறுப்பது இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த விஜய் அண்ணாவை வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு வருத்தப்படுகிறேன்.

விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு
விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் – கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு

அவர் எனக்குப் பிடித்தமான நடிகர், அது அவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் உண்மையிலேயே மன்னிப்பு வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.