வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?

வாழை மரத்தில் காய், பூ, தண்டு, இலை என்று தலை முதல் அடிவரை பயன்படாத பொருளே இல்லை எனலாம். இன்று வாழைப்பூவை பயன்படுத்தி பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

MT4 Platforms

வாழைப்பூ – ஒன்று (சிறியது)

சீரகசம்பா அரிசி – 2 கப்
பட்டை, கிராம்பு – 5
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
பெரிய வெங்காயம், தக்காளி – 3
பச்சைமிளகாய் – 3
இஞ்சி-பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை இலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – பாதி
தயிர் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?
வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?

அரைக்க தேவையானவை :

சின்ன வெங்காயம் – 200 கிராம்,
முந்திரி – 10,
கசகசா – ஒன்றரை டீஸ்பூன்,
சோம்பு – ஒன்றரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்,
புதினா – 2 டீஸ்பூன்

செய்முறை :

ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியா வைத்து கொள்ளவும்.

சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.

இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.

இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.

சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.

சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்!!

Leave a Reply

Your email address will not be published.