வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்)

இன்று இலங்கை அரசாங்கம் ஜக்கிய நாடுகளின் தீர்மானம் தொடர்பாக இரண்டு கொள்கைகளை கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகளும் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு பல்வேறு திசைகளில் பயணிக்கின்றார்கள். எனவே இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே ஒரு நிலையான அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

easy way earn money click here,greate account

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கினிகத்தேனை கித்துள்கல இங்கோயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்களுக்கான புதிய விடுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் மேற்கொண்டிருந்தார். பாடசாலையின் அதிபர் போல் பெரேரா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இதற்காக 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இன்று இலங்கையின் முக்கிய பிர்ச்சினைகளில் ஒன்றாக இருப்பது எங்களுடைய வடகிழக்கு பிரச்சினை இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு தற்பொழுது கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று அப்படியான ஒரு நிலை இருக்கின்றதா?

அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு கருத்து முரண்பாடுகள். ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன ஒரு பக்கமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ இன்னொரு பக்கமாகவும் செயற்படுவதே இதற்கு முக்கிய ஒரு காரணமாகும்.அது மட்டுமல்லாமல் வடகிழக்கை பிரதிநிதத்துவம் செய்கின்ற தமிழ் கற்சிகளும் ஒவவொரு திசையிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.அப்படி செயற்படுவதன் மூலமாக நாம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது.

முதலாவதாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.அப்படி இல்லாமல் இந்த விடயங்களை சாதிக்க முடியாது.எனவே இந்த அரசாங்கத்தின் இரட்டை கொள்கையும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு மத ரீதியிலான பிரச்சனைகள் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஆங்காங்கே பிரச்சினை ஏற்படுகின்றது. மலையக மக்களுக்கு சம்பள பிரச்சினை எனவே இப்படி இந்த நாடடில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்வதற்கு பலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அமைச்சர் இராதாகிருஷ்ணன்
வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அமைச்சர் இராதாகிருஷ்ணன்
வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அமைச்சர் இராதாகிருஷ்ணன்

எனவே நாங்கள் ஒற்றமையாக இருந்தால் மாத்திரமே எல்லா வெற்றிகளையூம் பெற்றுக் கொள்ள முடியும்.இல்லாவிட்டால் இந்த நாடு மீண்டும் ஒரு பிளவை நோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஒற்றுமையின் பலம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எனவூம் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.