ரஷியாவிடம் 18 சுகோய் போர் விமானங்கள் வாங்குகிறது இந்தியா

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ரஷியாவிடம் 18 சுகோய் போர் விமானங்கள் வாங்குகிறது இந்தியா

ரஷியாவிடம் இருந்து 18 புதிய சுகோய் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது.

ரஷியாவிடம் 18 சுகோய் போர் விமானங்கள் வாங்குகிறது இந்தியா
சுகோய் போர் விமானம்
மாஸ்கோ:

MT4 Platforms

இந்திய விமானப்படை தனது பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து 18 புதிய ‘சுகோய் சு 30எம்கேஐ’ ரக போர் விமானங்களை வாங்குகிறது. இத்தகவலை ரஷிய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துணை இயக்குனர் விளாடிமிர் ட்ரோச்சோவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

சுகோய் போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில் நாங்கள் அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால், இந்திய விமானப்படையிடம் இருந்து 18 புதிய சுகோய் விமானங்களுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ தளவாடங்கள் அளிப்பதற்கான 6 ஒப்பந்தங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அவற்றில், 20 அதிநவீன ‘மிக் 29’ ரக போர் விமானங்கள் வினியோகம், 450 டி90 ரக டாங்கிகளை நவீனப்படுத்துதல், இந்தியாவில் ராணுவ உதிரிபாகங்கள் உற்பத்தி செய்தல், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், கடற்படை சாதனங்கள், விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் ஆகியவற்றை தயாரித்தல் ஆகியவை தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஒப்பந்தம் போடலாம் என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம். ஆனால், இந்தியா அனைத்தையும் ஒரே ஒப்பந்தமாக இணைத்து செயல்படுத்த விரும்புகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். எனவே, இது விரிவான ஒப்பந்தமாக இருக்கும்.

இதற்கான வரைவு ஒப்பந்தம் மீது பரிசீலனை நடந்து வருகிறது. உற்பத்தியை விரைவுபடுத்த முதலாவது ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.