வடக்கில் முதன் முறையாக ரணிலுக்கு மரியாதை வழங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் மாணவர்கள்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணத்திற்கு நேற்று திங்கட்கிழமை வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரசிங்க பல்வேறு நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் கலந்து கொண்டார்.

இதன் ஒரு அங்கமாக ஸ்கந்தவரோதயா பாடசாலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

MT4 Platforms

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த பிரதமருக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னாடையும் அணிவித்து பிரதமருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டது.

இதன்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயுதம் ஏந்திய மாணவர் படையணியின் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது

இவ் அணிவகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடேற்) அணியினர் வழங்கியிருந்தனர்.

சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு (கொமான்டிங்) அமைய தமிழ் மாணவர்கள் இவ் அணிவகுப்பு மரியாதையினை பிரதமருக்கு வழங்கியிருந்தார்கள்.

ஆரம்பத்தில் மாணவ சிப்பாய் படையணி உருவாக்கத்திற்கு (தமிழ் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு) தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதும், கால போக்கில் அது தொடர்பில் பேசுவதோ அல்லது, அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.