யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்தார். இந்த பாடலை வைத்து ஒரு விளம்பர வீடியோ தயாரித்து வெளியிட அந்த வீடியோ பெரிய வரவேற்பு பெற்றது.

யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா
யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா

இதேபோல் யோகி பாபு நடிக்க ஒரு விளம்பர பாடல் உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் விஜய் இயக்கிய வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார்.

ராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா அடுத்து சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தவிர வேறு படம் அவர் கையில் இல்லாததால் விளம்பர பாடலுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்.

MT4 Platforms

Related Post