SHARE THIS NEWS please, THANK YOU
............................

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிற்கு பயணம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.

கோட்டாபாயவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பிரதான கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடக்கின் அனைத்து மாவட்டங்களிற்கும் பயணம் செய்ய கோட்டாபாய தீர்மானித்துள்ளார். பயணம் தொடர்பாக, பெரமுனவின் ஆதரவு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பிலான கூட்டம் ஒன்றை நடத்த வேண்டுமென கோட்டாபய தரப்பு விரும்புகிறது. யாழில் பெருமளவு பொதுமக்கள் பங்கேற்புடன் கூட்டம் நடத்துவது, தேர்தலில் தமிழ் வாக்குகள் கிடைப்பதில் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என கோட்டாபய தரப்பு நம்புகிறது.

MT4 Platforms

யாழ் நகரிலுள்ள மண்பம் ஒன்றில் பொதுக்கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

கோட்டாபய வெளிநாடு சென்று வந்த பின்னர், தெற்கில் சில பகுதிகளிற்கு செல்வார். அதன் பின்னர் அடுத்த மாத இறுதியில் வடக்கு, கிழக்கு விஜயம் மேற்கொள்ளப்படலாமென தெரிகிறது.