SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்­பா­ணம்,  பருத்­தித்­துறை கடற்­ப­ரப்­பில் நேற்று மதி­யம் சட்­ட­வி­ரோத மீன்­பி­டி­யில் ஈடு­பட்ட வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளைப் பிடிப்­ப­தற்­காக, உள்­ளூர் மீன­வர்­கள் விரட்­டிச் சென்­ற­போது அவர்­கள் தப்­பித்­துச் சென்­றுள்­ள­னர். ஒரு­வர் மாத்­தி­ரமே பிடி­பட்­டுள்­ளார். அவரை கடு­மை­யாக எச்­ச­ரித்து விடு­வித்­துள்­ள­னர்.

கட­லட்டை பிடிப்­ப­தற்கு வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளு­டன் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. முக்­கி­ய­மாக கடற்­க­ரை­யி­லி­ருந்து 5 கிலோ மீற்­றர் தூரத்­துக்கு அப்­பால் சென்று மட்­டுமே கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­ட­மு­டி­யும் என்ற நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கடற்­க­ரை­யி­லி­ருந்து 2 கிலோ மீற்­றர் தூரத்­தில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்று உள்­ளூர் மீன­வர்­கள் குற்­றஞ் சுமத்­து­கி ன்­ற­னர்.

MT4 Platforms

கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­ப­வர்­கள் வலுக் கூ­டிய பட­கு­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அந்­தப் பட­கு­கள் உள்­ளூர் மீன­வர்­க­ளின் வலை­களை அறுக்­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் கட­லட்டை பிடிப்­ப­தற்கு சுழி ஓடிச் செல்­ப­வர்­கள், உள்­ளூர் மீன­வர்­க­ ளின் வலை­களை அறுக்­கின்­ற­னர். இத­னால் உள்­ளூர் மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் தொடர்ச்­சி­யா­கப் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்

இந்த நிலை­யில் நேற்று மதி­யம் கடற்­க­ரை­யி­லி­ருந்து சுமார் 2 கிலோ மீற்­றர் தூரத்­தில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­பட்ட மீன­வர்­களை உள்­ளூர் மீன­வர்­கள் இனங்­கண்­டுள்­ள­னர். சட்­ட­வி­ரோத மீன்­பி­டி­யில் ஈடு­ப­டும் அவர்­க­ளைப் பிடிப்­ப­தற்­காக உள்­ளூர் மீன­வர்­கள் விரட்­டிச் சென்­றுள்­ள­னர். அவர்­கள் தப்­பித்­துச் சென்­றுள்­ள­னர். ஒரு­வர் மாத்­தி­ரமே பிடி­பட்­டுள்­ளார். அவர் கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யின் பின்­னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.