SHARE THIS NEWS please, THANK YOU
............................

முல்லைத்­தீவு மாவட்­டத்­தின் ஒட்­டு­சுட்­டான் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட மேழி­வ­னம் பகு­தி­யில் அனு­ம­தி­யின்றி மணல் அகழ்­வது அதி­க­ரித்­துள்­ளது. சம்பந்­தப்­பட்ட அரச திணைக்­க­ளங்­கள் இது­வரை இதைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று அந்­தப் பகுதி மக்­களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. இனி­யா­வது இதைத் தடுத்து நிறுத்தவேண்­டும் என்று கோரிக்கையையும் விடுக் கின்­ற­னர்.

ஒரு இர­வில் 30க்கும் மேற்­பட்ட டிப்­பர்­க­ளில் மணல் அகழ்வு நடை­பெ­று­கின்றது. மாலை 6 மணி­தொ­டக்­கம் அதி­காலை 5 மணி­வரை மணல் அகழ்ந்து டிப்­பர்­க­ளில் ஏற்­றப்­பட்டு வெளி இடங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது.

பொலி­ஸா­ரும் இதைக் கண்­டு­கொள்­வ­தில்லை என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர். டிப்­பர் உரி­மை­யா­ளர்­கள் 12ஆயி­ரம் ரூபா­வுக்கு உழவு இயந்­தி­ர­க்கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து மணல் கொள்­வ­னவு செய்து, ஒட்­டு­சுட்­டான் பகு­தி­யில் 28 ஆயி­ரம் ரூபா­வுக்­கும், நெடுங்­கேணி, முள்­ளி­ய­வளை பகு­தி­க­ளில் 30 ஆயி­ரம் ரூபா­வுக்­கும், புளி­யங்­கு­ளம் பகு­தி­யில் 32 ஆயி­ரம் ரூபா­வுக்­கும் விற்­பனை செய்­து­வ­ரு­கின்­றார்­கள். ஒட்­டு­சுட்­டான் நெடுங்­கேணி ஊடா­க­வும் மாங்­கு­ளம் ஊடா­க­வும் குறித்த பகு­தி­யி­லி­ருந்து மணல் ஏற்­றப்­பட்டு வரு­கின்­றது.

MT4 Platforms

இதனை ஒட்­டு­சுட்­டான் பொலி­ஸார், நெடுங்­கே­ணிப் பொலி­ஸார், மாங்­கு­ளம் பொலி­ஸார் கண்­டு­கொள்­வ­தில்லை. அவர்­கள் மணல் ஏற்­று­ப­வர்­க­ளுக்கு சார்­பா­கவே நடந்­து­கொள்­கின்­ற­னர் என்­றும் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர். எனவே சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ ளங்­கள் இதில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

More from my site 00447536707793 வன்னி மைந்தன்