SHARE THIS NEWS please, THANK YOU
............................


கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர்பிரிவிற்;குட்பட்ட ஊரியான் 3ம்யுனிற் பகுதியில் நேற்றிரவு அதிகாலை 1.30 மணிக்கு புகுந்த காட்டுயானை ஒன்று வீடடில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல்மூடைகளை சேதம் செய்து உட்கொண்டுள்ளதுடன், குறித்தவீட்டின் உரிமையாளர் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர், 3ம் யுனிற் ஊரியான் முரசுமோட்டையைச்சேர்ந்த சிற்றம்பலம் குருநாதன் வயது 74 என்பவரே உயிரிழந்துள்ளார் .தற்போது சடலம் கிளிநொச்சி மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இதுதொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப்பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முரசுமோட்டையில் வீடுபுகுந்து யானை தாக்கி - குடும்பஸ்தர் பலி

மேலும் செய்திகள் படிக்க :