SHARE THIS NEWS please, THANK YOU
............................

முன்விரோதத்தில் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் குத்திக் கொலை

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள சொண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). இவர் மதுவிலக்கு போலீசாருக்கு கஞ்சா விற்பவர்கள் குறித்த தகவல் கொடுக்கும் இன்பார்மராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆலுவாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக சென்றார். அங்கு தனது மனைவியை சேர்த்து விட்டு வெளியில் நின்று கொண்டிருந்தார்.

MT4 Platforms

அப்போது அதே ஆஸ்பத்திரியில் சுப்பிரமணியன்(38), அவரது நண்பர் விஷால்(35), கிருஷ்ணபிரசாத்(38) ஆகியோர் நின்றிருந்தனர். இவர்கள் 3 பேரும் இந்த ஆஸ்பத்திரியில் பின்புறம் அடிக்கடி கஞ்சா விற்பனை செய்வது, மதுகுடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை ஒருமுறை மணிகண்டன் மதுவிலக்கு போலீசாரிடம் தகவல் கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மணிகண்டன் அங்கு நிற்பதை பார்த்ததும் அவர்கள் 3 பேருக்கும் கோபம் அதிகமானது. இதையடுத்து அவர்கள் மணிகண்டனிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் அவர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள் படிக்க :