முன்னேறி தாக்கு ………!

செழிமைக்கும் எளிமைக்கும் 
செந்தமிழ் முழுமைக்கும் …….. 
அடிமையாய் மூழ்கவோ – 
அட தமிழா எழுவாய் …..

வெந்தணல் மனத்திற்குள் – 
வேகும் கனதிக்குள் ………….. 
பொசுங்கவோ நீயின்று ..? 
பொடியாக்கி பகை முழக்கு ….

வந்தனர் ஆரியர் – 
வலிகளை தந்திங்கு ……….
குந்திட விடுவதோ ..? 
குல தமிழ் அழுவதோ …?

செய் நெறி விற்றுமே 
செந்தமிழ் குடித்தவர் ……….. 
வந்தாளா விடுவதோ ..? – தமிழ் 
வழி மாறி மடிவதோ ..?

முன்னைய பரம்பரை 
முன் விட்ட தவறதை …..
பின்னைய பரம்பரை 
பின் தொடர் முறையோ …?

கரிகாலன் வழி சொன்ன 
கனதியாம் தமிழீழம் ……
ழுமையாய் பெற்றிட 
முன்னேறி தாக்கு ………!

முன்னேறி தாக்கு .........!
முன்னேறி தாக்கு ………!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018

MT4 Platforms

Related Post