SHARE THIS NEWS please, THANK YOU
............................

தமிழ்த் தலைமைகள் ஒரு குழப்பகரமான நிலையிலிருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இற்றைவரை உறுதியாக கூறாது மெளனம் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை தமிழ் மக்களுக்கு சொல்வதென்று புரியாத நிலையிலே பரிதவிக்கின்றனர் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.

கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

MT4 Platforms

தமிழ் மக்கள், உரிமை ஆணை கொடுத்து பாராளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ்மக்களிடம் எவ்வாறு முகம் கொடுப்பது என்ற நிலையிலேயே கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் தமிழ் மக்களின் மனங்களில் இருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்கிறோம், இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூட்டமைப்பு சொன்னாலும்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளினால் வென்றவர்கள் கையை விரித்ததனால் புலம்பிக்கொண்டு நாங்கள் அரசினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமையின் தலைமைத்துவமின்மையினை காட்டுகின்றது.

எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இலங்கையிலே இருக்கக்கூடிய அனைத்து சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் ஒருமித்த கருத்திலே எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலே இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

மேலும் செய்திகள் படிக்க :