மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் – கமல்நாத்

மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் – கமல்நாத்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் பதவிவகித்து வருகிறார். இவர் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

easy way earn money click here,greate account
மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் - கமல்நாத்
மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் – கமல்நாத்

இதற்கிடையே, சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தனது மகன் நகுல் நாத்தை களமிறக்கி உள்ளார் கமல்நாத்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தனோரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

நகுல் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரது உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.