SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று (18) ஓய்வுபெறுகிறார்.

கடந்த ஆண்டு யூலை மாதம் ஓய்வுபெறும் வயதையெட்டிய சேனநாயக்க, ஜனாதிபதியால் ஒரு வருட சேவை நீடிப்பை பெற்றிருந்தார். இன்றுடன் அவரது சேவை நீடிப்பு காலம் முடிகிறது.

இராணுவத்தளபதியின் பதவியை நீடிப்பதாக ஜனாதிபதியால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இன்று ஓய்வுபெறும் வயதை அவர் எட்டியபோதும் இதுவரை சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் சேவையில் தொடர வாய்ப்பில்லாமல் போக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

MT4 Platforms

இதேவேளை, புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் சவேந்திர சில்வா, போர்க்குற்றச்சாட்டு விவகாரத்தில் சர்வதேச அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட தகுதியுடைய இன்னொரு அதிகரியாக, தற்போதைய மேல்மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லயனகே உள்ளார். எனினும், கடந்த யூலை மாதமே ஓய்வுபெற வேண்டிய சவேந்திர சில்வாவிற்கு ஆறு மாத சேவை நீடிப்பை ஜனாதிபதி வழங்கியிருந்தார். இது, சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக்கும் முயற்சிக்கான முதற்படியென்றும் கருதப்படுகிறது.

இறுதி யுத்தத்தின் வன்னி மீதான படையெடுப்பை இராணுவம் மன்னாரில் இருந்து ஆரம்பித்தது. தள்ளாடியிலிருந்து 58வது டிவிசன் தாக்குதலை ஆரம்பித்தது. அப்போது 58வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கடமையிலிருந்தார். மன்னாரிலிருந்து பூநகரியை அடைந்து, அங்கிருந்து பரந்தன், ஏ 35 வீதியூடாக தேவிபுரம், பின்னர் முள்ளிவாய்க்கால் வரை இந்த டிவிசன் யுத்தத்தின் முன்னிலை பாத்திரம் வகித்தார். இதன்போது பெருமளவு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீதும், அந்த படையணி மீதும் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.