SHARE THIS NEWS please, THANK YOU
............................

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் இரு உத்தியோகத்தர்களை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் காணாமற்போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை கொள்ளையிட முயற்சித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் நேற்று (12) மாத்தறை மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னலையில் ஆஜயர்படுத்தப்பட்டனர். 

MT4 Platforms

இதன்போது குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.