SHARE THIS NEWS please, THANK YOU
............................

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களை உடனடியாக தரம் மூன்று ஒன்றுக்கு நிலைப்படுத்த நடவடிக்கை

பெருந்தோட்ட கைததொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

அண்;மையில் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்கள் 3179 பேருக்கு நியமனம் வழங்கபட்டது¸ இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக தற்போது 10.000.00 ரூவாவே வழங்கபட்டு வருகின்றன. இவர்களில் பெரும்பாலோனார் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் பயிற்றபட்டு வருகின்றனர். தற்போது 1473 உதவி ஆசிரியர்கள் தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஆசிரியர் கலாசாலைகளை விட்டு வெளியேறி உள்ளனர் இவர்களுக்கு ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்டு பதவி நிலைப்படுத்தபட வேண்டும். இருந்தும் இவை நடைபெறாததினால் பயிற்றபட்ட ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

MT4 Platforms

இந் நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு கூடிய விரைவில் ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்டு பதவி நிலைப்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவே சுரேஸ் அவர்கள்
பண்டாரவளை நாயாபெத்த தோட்டம் செங்கத்தரின் பிரிவிற்கான பாதை அவிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

இந்த நியமன இழுபறி தொடர்பில் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட ஆசிரியர்கள் குழு ஒன்று என்னை வந்து சந்தித்து முறையிட்டது. நான் உடனே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு வினாவினேன். அவர்கள் இந்த பிரச்சனை தொடர்பில் முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அனைத்து விடங்களும் நிவர்த்தி செய்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பயிற்றப்பட்ட 1473 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இதில் குறிப்பாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கனிசமான அளவு உள்வாங்கப்பட்டு உள்ளதாகவும் என்று கூறினார். ஊவா மாகாண கல்வி அதிகாரிகளும் இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
ஆகவே பயிற்றப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பயிற்றப்படாத ஏனைய ஆசிரியர்களையும் பயிற்றுவிக்க கவ்வி அமைச்சு நடிவடிக்கைகளை மேற்க் கொண்டுள்ளது இதற்கும்; விண்ணப்பித்து பயிற்சிகளை மேற்க் கொண்டு தங்கள் பதவி உயர்வுளை பெற்றுக் கொள்ளவும். அப்போது தான் சரியான சம்பள உயர்வும் கிடைக்கும். தற்போது 10.000.00 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டு ஆசிரிய உதவியாளர்கள் படும் இன்னல்களை நான் அறிவேன்¸ இதற்கு எல்லாம் தீர்வு உரிய காலத்தில தங்களது பயிற்சிகளை முடித்துக் கொள்வது தான் என்று கூறினார்.

பெருந்தோட்ட உதவி  ஆசிரியர்களை உடனடியாக தரம் மூன்று ஒன்றுக்கு நிலைப்படுத்த நடவடிக்கை

மேலும் செய்திகள் படிக்க :