SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரசா மே கோரிக்கை

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது.

இதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம் அந்நாட்டில் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற தவறியதால் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை சிக்கலானது.

MT4 Platforms

இந்த ஒப்பந்தம் மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் இருமுறை ஓட்டெடுப்பு நடந்தபோதும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

மேலும், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையும் பிரிட்டன் நாட்டு எம்.பி.க்கள் இருமுறை நிராகரித்ததால், ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்த வேண்டிய சூழல் உருவானது.

இதுதொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தமின்றி வெளியேற ஏப்ரல் 12-ந் தேதி வரையும், ஒப்பந்தத்துடன் வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரையும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை 3-வது முறையாக பாராளுமன்றத்தில் தெரசா மே ஓட்டெடுப்புக்கு விட்டார். ஆனால் வழக்கம் போல் எம்.பி.க்கள் அந்த ஒப்பந்தத்தையும் மீண்டும் நிராகரித்து விட்டனர்.

இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறும் சூழல் உள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வலியுறுத்தி பாராளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அதன் மீது உடனடியாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 313 ஓட்டுகளும், எதிராக 312 ஓட்டுகளும் கிடைத்தன. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து அந்த தீர்மானம் மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரசா மே கோரிக்கை
பிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரசா மே கோரிக்கை

இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்-குக்கு தெரசா மே இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.