பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என மூன்று படங்களில் நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் தெலுங்கில் அகில் திரைப்படத்திலும் இந்தியில் ஷிவாய் படத்திலும் நடித்து கவனம் பெற்றுள்ளார். தற்போது கன்னடத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் யுவரத்னா எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். புனித் ராஜ்குமார் ஏற்கனவே சந்தோஷ் இயக்கத்தில் நடித்த ராஜகுமாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

MT4 Platforms
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

சாயிஷா தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இதில் ஆர்யா, மோகன்லால், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.