பிடித்த வாழ்வில் யாரு இன்று ..?

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிடித்த வாழ்வில் யாரு இன்று ..?

புத்தம் புது காலையில
புன்னகையை காணலையே …
மஞ்சள் வெயில் கூடிருக்கு
மனசெல்லாம் காய்ந்திருக்கு ….

நிழல் போல தொடரும் நிலவே
நின்மதியை பாரு பாரு …
நித்தம் வீடு வந்தும் என்ன
நின்மதிக்கு போரு போரு ….

MT4 Platforms

ஆசை மனம் கூட வைச்சா
அடையும் இலக்கை விலக்கி வைச்சா …
தேறும் எப்படி வாழ்வு …?
தேயும் நிலவே கூறு ….

முன்னிரவில் நீதானே
முழுமதியாய் வருவாயே …
கண்ணீரில் ஏனோ
கரைகிறாய் நீயோ …?

ஆசை பட்ட வாழ்வை
அடைந்ததிங்கு யாரு …?
பிடித்து போன வாழ்வில் – இன்று
பிரியத்தோட யாரு …?

இது தானே விதியாச்சு
இதயத்திலே வலியாச்சு …
அழுது இன்று பயனில்லை
ஆனந்தம் தேடு முல்லை ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )

ஆக்கம் -08/04/2019

பிடித்த வாழ்வில் யாரு இன்று ..?
பிடித்த வாழ்வில் யாரு இன்று ..?

Leave a Reply

Your email address will not be published.