பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி

இந்தி பிக் பாஸின் 13வது சீசனை தொகுத்து வழங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரூ. 403 கோடி சம்பளம் வாங்குகிறாராம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசனுக்கு வில்லங்கமான ஆட்களையாக தேர்வு செய்து போட்டியாளர்களாக அனுப்புகிறார்களாம். போட்டியாளர்கள் பிற மொழிகளில் பிக் பாஸ் சீசன் துவங்குகிறது என்றால் போட்டியாளர்கள் யார், யார் என்பது குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது என்றால் இந்த சீசனில் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போகிறார்களோ என்று தான் பேசுவார்கள். சல்மான் கான் பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு வாரத்திற்கு ரூ. 31 கோடி சம்பளமாம். ஆக 26 எபிசோடுகளுக்கு மொத்தம் ரூ. 403 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். பணம் ஒவ்வொரு சீசனுக்கும் சல்மான் கானின் சம்பளம் தான் எகிறிக் கொண்டே போகிறது. சல்மானுக்கு ரூ. 403 கோடி என்றால் நம்ம உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு எத்தனை கோடி சம்பளம் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இல்லை. பிடிக்கவில்லை பிக் பாஸ் 13 குறித்து சல்மான் கான் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு பிக் பாஸ் நடக்கும் முறை பிடிக்கவில்லை. ஆனால் என்டமோல் மற்றும் கலர்ஸ் சிலரை போட்டியாளர்களாக தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அவர்களை எல்லாம் நான் டீல் செய்ய வேண்டி உள்ளது. சில நேரம் பிடிக்கும், சில நேரம் பிடிக்காது. ஆனால் போட்டியாளர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றார்.

பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.