பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன?

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன?

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை பார்ப்போம்.

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன?
சென்னை:

MT4 Platforms

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை பார்ப்போம்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது.

பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். அவ்வகையில் ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர்.

சில வேட்பாளர்கள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டு நிறைவடையாத மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மக்கள் செல்வாக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வெற்றிகுறித்து சென்னையில் இன்று பேட்டியளித்த கமல்ஹாசன், ‘தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி.

மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில்தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.