படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் – நடிகை ரிச்சா புகார்

படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் – நடிகை ரிச்சா புகார்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

easy way earn money click here,greate account

இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

தமிழ், தெலுங்கு பட உலகிலும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இவர் 2002-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்
படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் – நடிகை ரிச்சா புகார்

அதிக படங்களில் நடித்துக்கொண்டு இருந்தபோதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா கூறியதாவது:-

“என் சினிமா வாழ்க்கை மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன்.”

இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.