நிரவ் மோடியின் மனைவிக்கு ‘பிடிவாரண்டு’

நிரவ் மோடியின் மனைவிக்கு ‘பிடிவாரண்டு’

வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் நிரவ் மோடி மோசடி செய்த பணத்தில் அவரது மனைவி ஆமி மோடி நியூயார்க்கில் உள்ள சென்டரல் பார்க் பகுதியில் சொத்து வாங்கி இருப்பது அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

நிரவ் மோடியின் மனைவிக்கு ‘பிடிவாரண்டு’
நிரவ் மோடியின் மனைவிக்கு ‘பிடிவாரண்டு’

இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர்.

MT4 Platforms

Leave a Reply

Your email address will not be published.