நடுரோட்டில்… மனைவியின் சடலத்துடன் கணவன் போராட்டம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

நடுரோட்டில்… மனைவியின் சடலத்துடன் கணவன் போராட்டம்

மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் டாக்டர் போராட்டம் -வீடியோ சென்னை: விபத்தில் அடிபட்டு இறந்து போன மனைவியின் சடலத்தை நடுரோட்டில் போட்டு, ஆவேசமிக்க ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார் டாக்டர் ரமேஷ்! கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர். இதனால் டாக்டர் என்ற முறையிலும், பொதுசேவை என்ற முறையிலும் சுற்றுவட்டாரத்தில் பிரபலமான நபர்! இவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள் ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும் அழைத்து வருவது ஷோபானதானாம். அப்படித்தான் நேற்று சாயங்காலமும் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்துள்ளார். உயிரிழந்த ஷோபனா ஜம்புகண்டிக்கு அருகே வந்தபோது, தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார். பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. ரத்த வெள்ளம் விரைந்து வந்த போலீசார், இந்த விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறினார். உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார். பிணத்துடன் கோஷம் பிணத்தை நடுரோட்டில் போட்டு டாக்டர் போராட்டம் நடத்துகிறார் என்ற தகவல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பறந்தது. விரைந்து வந்து அவர்கள் “டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விபத்தை ஏற்படுத்தியவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் சமரசம் செய்தனர். போராட்டம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ரமேஷ் நடத்திய போராட்டத்தில் அந்த பகுதியே பரபரப்பும், கொதிப்புமாக காணப்பட்டது. மனைவி இறந்த நிலையில், மகள் உயிருக்கு போராடும் நிலையிலும், டாஸ்மாக்கை ஒழிக்க போராட்டம் நடத்த எத்தனை பேருக்கு தோன்றும், இந்த மனநிலைமை எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால், விதி.. நல்லவங்களைதான் அதிகமாக சோதிக்குது.. இதற்கு ரமேஷூம் ஒரு உதாரணம்!

நடுரோட்டில்… மனைவியின் சடலத்துடன் கணவன் போராட்டம்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.