SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் உள்ள 05ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (11) காலை பத்து மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.