SHARE THIS NEWS please, THANK YOU
............................

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை : தேர்தலுக்கு தயாராகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் 27ம் தேதியும் இதர நாடுகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இரண்டாம் தவணைக்காலத்தின் அரசவை நிறைவுகண்டிருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது கடந்து வந்த பாதை அதன் செயல்முனைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கடந்த அரசவை அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விரிவான உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

MT4 Platforms

அவ்வுரையில் குறிப்பாக நாடுகடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக பொருளியல் அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் வழிமுறையாகவும் நாடுகடந்த அரசியலும் நாடுகடந்த தேசியமும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும் பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்ற கோட்பாட்டினையும் கையில் எடுத்து நமது நாடுகடந்த வாழ்க்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே நாடுகடந்த அரசியலை நாம் அந்நேரம் பார்த்தோம்.

நாடுகடந்த அரசியலும் அவை சார்ந்த போராட்டங்களும் பொதுவாக இயங்கும் ஒரு தேசம் – ஒரு அரசு அல்லது ‘சர்வதேச உறவுகள்’ என்கிற நெறிமுறைக்குள் அடங்காதவை. அடக்கப்பட முடியாதவை.

நாடுகடந்த அரசியல் இவற்றிற்கு அப்பால் தொழிற்படுவதால் இது புதிய ஒழுங்கு முறைகளையும் புதிய நிறுவன அமைப்புக்களையும் வேண்டி நிற்கின்றது என நாம் எமது முயற்சியை நியாயப்படுத்தி இந்தப் பின்னணியில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக்கட்டமைப்பினை தமிழீழ விடுதலை அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதியே இப்பாதையில் இறங்கினோம்

ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடுகடந்த அரசாங்கத்தை அன்று முன்மொழிந்தது. அன்று முதற்தடவையாக உருவானது எவ்வாறு உண்மையோ அதற்கும் மேலாக இன்று வரை அந்த முயற்சியில் தடை ஏதுவும் இன்றி 9 ஆண்டுகளாக அரசாங்கமாக இயங்கி வரும் ஒரே மக்கள் அரசியல் இயக்கம் எமதானது என்பது பெருமைக்குரியது.

அந்த அரசியல் கோட்பாட்டு வலிமை மிக்க கட்டமைப்பின் தனித்துவம் எம் எல்லோராலும் எமது மக்களாலும் ஒரே அளவுக்கு உள்வாங்கப்ப பட்டுள்ளதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதே.

அது போலவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்தவொரு நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையும் அவதானத்துக்குரியது.

ஆண்டுக்கு இருமுறை நேரடியாகவும் ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பவாயிலாகவும் அரசவைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளமை என்பது காலத்தின் வழித்தடத்தில் பதியப்பட வேண்டியவை. மற்ற தமிழரசியல் அமைப்புக்கள் இத்தகைய வரலாறு கொண்டவைகள் அல்ல என்பதும் உண்மையே. மற்ற தமிழரசியல் அமைப்புக்களு மட்டுமல்ல இன்று உலகில் இயங்கும் விடுதலை இயக்கங்களின் பாராளுமன்ற அரசியலுக்கும் (பாலஸ்தீனம் – குர்திஸ்தான்) நாமே முன்மாதிரியாக இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைச் சுடரை உயிர்ப்புடன் கட்டிக்காத்து வருகிறோம்.

நீதிக்கும் இறைமைக்குமான எமது பல்முனை செயற்பாடுகளை உலக அரங்குகள் நோக்கி முன்னெடுத்து சென்றுள்ளோம் என தனதுரையில் குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மே-18 2009 முதல் இற்றை வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு செயல்முனைப்புகள் குறித்து பட்டியலை இட்டிருந்ததோடு செயற்திட்டங்களை இன்னும் வீச்சும் முன்னெடுக்க முடியாமல் போனமைக்கு ஆள்வளப்பற்றாக்குறை காரணமெனத் தெரிவித்திருந்தார்.

நாடுகடந்த வகையில் விடுதலைக்காய் அரசியலை தெளிவாகவும் குழப்பம் மாயைகள் குதர்க்கமான சொல்லாடல் எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி வாருங்கள் போராடுவோம் எமது மண்ணை மீட்டு இறையாண்மை மிக்க தமிழீழம் அமைப்போம் என ஒன்பது ஆண்டுகளாக போராடி வரும் தனித்துவமிக்க நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தை தலைமை தாங்கி வழி நடத்திய வாய்ப்பை தனக்குத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு கடமைப்பட்டவனாக தான் உள்ளேன் என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

உலக சூழலில் எம்மை நோக்கிய அவதானம் குறையவில்லை. தாயக மக்கள் கடந்த மாவீரர் நாளில் எவ்வாறு நிமிர்ந்து நின்று காட்டினார்களோ எவ்வாறு உலகம் அவர்களது நிமிர்வைக் கண்டதோ அதே நிமிர்வுடன் எமக்கான நேரான பாதையில் எமது நாடுகடந்த அரசியலை புதிய வேகத்துடன் எடுத்து செல்வோம். அந்த ஒளி தெரியும் இடத்தை அடைந்து விடுவோம் தூரம் அதிகம் இல்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேலைத்திட்டங்களும்

சிங்களம் தனது இனத்துவேசம் மிக்க கோரம் நிறைந்த வடிவத்தின் இன்னொரு பக்கத்தை உலகுக்குப் படமிட்டுக் காட்டி தனது அரசவையை ஓத்திவைத்தும் தலைமை பதவிக்கென கைகலப்பு செய்யும் ஓர் அசிங்கமான போர்க்களமாக தென்னிலங்கை அரசியல் மாற்றியுள்ள இக்காலத்தில், மாண்புமிக்க மக்களாக மக்களாட்சி மரபின்படி நாம் கையில் எடுத்த எமக்குத் தரப்பட்ட கடமைகளையும் பொறுப்பையும் நிறைவு செய்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினது அரசவை தனது இரண்டாம் தவணைக்காலத்தின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பெருமைக்குரியது. உலகின் பார்வைக்கு தெரிவிக்கப் படவேண்டியது.

அமெரிக்காவின் பிலடெலிபியா நகரின் வரலாறு பூத்தா National Constitution Centrey 2010 மே-18ம் நாளன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் எமது இப் புதிய அரசியல் முனைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படட நேரத்தையும் நாம் வந்த பாதையையும் எமது சாதனைகளையும் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்குகளையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கின்றோம்.

அவற்றை மதிப்பிடுவது எமது மக்களதும் பரந்த உலகத்தின் பொறுப்பாகத் தான் இருக்கவேண்டும். இனி நாம் செல்ல வேண்டிய பாதையில் புதுப்பிக்க வேண்டிய அணுகுமுறைகள் எம்முடன் புதியவர்களை இணைத்து மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகள் யாவன முதன்மைப் பணிகாக உள்ளன.

தமிழீழத் தாயகத்தில் 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு
இறைமையுள்ள தமிழீழ அரசை அமைக்கும் தனது எண்ணத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வெளிப்படுத்தியது.

தந்தை செல்வநாயகம் தலைமை வகித்த இம்மாநாட்டின் தீர்மான வாசகங்கள் பிரகடனப்படுத்திய அதே நியாயம் தான் இன்றும் இன்னும் பல மடங்கு முக்கியத்துவம் பெற்ற நியாயமாக துலங்குகிறது.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் தேசிய இனம் தன்னுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் ஒரு தனிநாடு அவசியம் என்ற உண்மையையும் யதார்த்தத்தையும் இடித்துரைத்து நிற்கின்றது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமை பொருந்திய சமயச்சார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீளஉருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்கமுடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. என்பதே அத் தீர்மானத்தின் உறுதியான நிலைப்பாடு.

மேலும் சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழீழ அரசு என்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும்படியும் தமிழ்த்தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் அறைகூவல் விடுத்திருந்தது.

42ஆண்டுகள் கழிந்த பின்னரும் அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அதன் நியாயத்தை வலுப்படுத்தும் வகையில் எமக்கு நடந்தேறிய இனவழிப்பை மையப்படுத்தி, நாடுகடந்த வகையில், விடுதலைக்காய் அரசியலை தெளிவாகவும் குழப்பம், மாயைகள், குதர்க்கமான சொல்லாடல் எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி, வாருங்கள் போராடுவோம், எமது மண்ணை மீட்டு இறையாண்மை மிக்க தமிழீழம் அமைப்போம் என ஒன்பது ஆண்டுகளாக போராடி வரும் தனித்துவம் மிக்க எமது நாடுகடந்த அரசங்கத்தை தலைமை தாங்கி வழி நடத்திய வாய்ப்பை, எனக்குத் தந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு கடமைப் படடவனாகவும், இப் பயணத்தில் பல்வேறு சவால்கள் மத்தியில் பணியாற்றி வந்த உறுப்பினர்கள் அமைச்சர்கள், துணையாக இயங்கிய அதனை தோழர்களுக்கும் எனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றேன்.

‘நாடுகடந்த தேசியம்’ என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக பொருளியல் அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் வழிமுறையாகவும், நாடுகடந்த அரசியலும் நாடுகடந்த தேசியமும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும் , பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்ற கோட்பாட்டினையும் கையில் எடுத்து நமது நாடுகடந்த வாழ்க்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே நாடுகடந்த அரசியலை நாம் அந்நேரம் பார்த்தோம்.

நாடுகடந்த அரசியலும் அவை சார்ந்த போராட்டங்களும் பொதுவாக இயங்கும் ஒரு தேசம் – ஒரு அரசு அல்லது ‘சர்வதேச உறவுகள்’ என்கிற நெறிமுறைக்குள் அடங்காதவை. அடக்கப்பட முடியாதவை.

நாடுகடந்த அரசியல் இவற்றிற்கு அப்பால் தொழிற்படுவதால் இது புதிய ஒழுங்கு முறைகளையும் புதிய நிறுவன அமைப்புக்களையும் வேண்டி நிற்கின்றது என நாம் எமது முயற்சியை நியாயப்படுத்தி, இந்தப் பின்னணியில்தான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக்கட்டமைப்பினை தமிழீழ விடுதலை அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதியே இப்பாதையில் இறங்கினோம்.

ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடுகடந்த அரசாங்கத்தை அன்று முன்மொழிந்தது. அன்று முதற்தடவையாக உருவானது எவ்வாறு உண்மையோ அதற்கும் மேலாக இன்று வரை அந்த முயற்சியில் தடை ஏதுவும் இன்றி 9 ஆண்டுகளாக அரசாங்கமாக இயங்கி வரும் ஒரே மக்கள் அரசியல் இயக்கம் எமதானது என்பது பெருமைக்குரியது.

அந்த அரசியல் கோட்பாட்டு வலிமை மிக்க கட்டமைப்பின் தனித்துவம் எம் எல்லோராலும் எமது மக்களாலும் ஒரே அளவுக்கு உள்வாங்கப்ப பட்டுள்ளதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதே.

அது போலவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்தவொரு நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையும் அவதானத்துக்குரியது.

ஆண்டுக்கு இருமுறை நேரடியாகவும் ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பவாயிலாகவும் அரசவைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளமை என்பது காலத்தின் வழித்தடத்தில் பதியப்பட வேண்டியவை. மற்ற தமிழ் அரசியல் அமைப்புக்கள் இவ் வரலாறு கொண்டவை அல்ல என்பதும் உண்மையே. மற்ற தமிழ் அரசியல் அமைப்புக்களும் மட்டுமல்ல இன்று உலகில் இயங்கும் விடுதலை இயக்கங்களும் பாராளுமன்ற அரசியலுக்கும் (பாலஸ்தீனம் – குர்திஸ்தான்) நாமே முன்மாதிரியாக இருக்கின்றோம்