தவிக்கும் ஆசை …!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

தவிக்கும் ஆசை …!

இஞ்சி இடையழகி
இதயம் கவர் உடலழகி …
பேசும் கிளி மொழியழகி
பேராவல் நீயழகி ….

MT4 Platforms

தூங்கும் இரவொன்றில்
துயில் கலைக்கும் நினைவழகி ..
தழுவும் காற்றாகி
தாலாட்டும் இயல் அழகி ….

ஓடி காதோரம்
ஒலிக்கின்ற சலங்கை ஓலி ….
வீசி போகின்ற
விளையாடடு குறும்பழகி ….

ஆடி காற்றடித்து
அரையிடை இடிந்து விழ …
கொங்கை தலையிடித்து
கொதிக்கின்ற பேரழகி …..

உன்னை நான் அணைக்கும்
உயில் எழுதும் நாள் ஒன்றில் ….
என்ன நீ செய்வாய் …?
எண்ணம் தவிக்கிறது ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -17/05/2019

  1. ஆக்கம் -17/05/2019
தவிக்கும் ஆசை …!

Leave a Reply

Your email address will not be published.