தமிழுக்கு வரும் மலையாள நடிகை

பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இதற்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் கதையாக இப்படம் உருவாகிறது. அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் தமிழ் படம் இது. மலையாளத்தில் மகிஷிண்டே பிரதிகாரம், கட்டபனையில் ஹிரித்திக் ரோ‌ஷன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர்.

தமிழுக்கு வரும் மலையாள நடிகை
தமிழுக்கு வரும் மலையாள நடிகை

அவரது தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து, டிராபிக் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். பைக் ரேஸராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். தவிர காஷ்மீரா, மதுசூதனன், யூடியூப் குழு நடிகர்கள் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது

MT4 Platforms

Related Post