500 கோடி டாலரை டிரம்ப் திருடி விட்டார் – வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

500 கோடி டாலரை டிரம்ப் திருடி விட்டார் – வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவய்டோ தன்னை வெனிசுலா அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார்.

அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அதைதொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகளும் அவரை பிரதமராக அங்கீகரித்த நிலையில் நிக்கோலஸ் மடுரோ தனது பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

MT4 Platforms

ரஷியா, சீனா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட சில நாடுகள் மடுரோவை ஆதரித்து வருகின்றன.

இந்நிலையில், நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த பல உதவிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் சுமார் 700 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோல் கிணறும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திருடி விட்டதாக நிக்கோலஸ் மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

வெனிசுலா நாட்டில் தேசிய மருந்து தயாரிப்புத்துறை வளர்ச்சி திட்டத்தை மீண்டும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மடுரோ, ‘நம் நாட்டில் மருந்துகள் தயாரிப்பு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்கம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி டாலர் பணத்தை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திருடி விட்டது.

வெனிசுலா நாட்டு மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த மோசமான கிரிமினல் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.