டார்க் காமெடி திரில்லர் படத்தில் யோகி பாபு

ஹங்கிரி உல்ப் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்‌ஷன் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.

இப்படத்தை இயக்குவது குறித்து பாலய்யா கூறும்போது, ‘இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். விஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்.

இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, சிஎஸ்கே மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், இந்த பெயரிடப்படாத படம் ‘டார்க் காமெடி திரில்லர்’ வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

டார்க் காமெடி திரில்லர் படத்தில் யோகி பாபு
டார்க் காமெடி திரில்லர் படத்தில் யோகி பாபு

இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

MT4 Platforms

Related Post