SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? – நரியோட தந்திரமா? : மாஃபியா டீசர்

தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.

MT4 Platforms

தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? – நரியோட தந்திரமா? என்று பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.