சீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி

சீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி

நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.

MT4 Platforms

அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.

அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.

எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்?

எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.

பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை. நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா??

ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?

சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்.

சீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி
சீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி

காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.