சம்பள உயர்வுக்கு தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும் -அமைச்சர் வடிவேல் சுரேஸ்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு
மலையகத்தின் அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது

கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது. தற்போது சிலர் கைசாத்து இடும் தொழிற் சங்கங்கள் மாத்திரம்தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும் எங்களுக்கு தெரியாது அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொருப்பு என்று சொல்லி தப்பித்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என கூறுகின்றார். பெருந்தோட்ட கைதொழில் அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் அவர்கள்.
பெருந்தோட்ட கைதொழில் அமைச்சில் இன்று (11.01.2018) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

MT4 Platforms
அமைச்சர் வடிவேல் சுரேஸ்
அமைச்சர் வடிவேல் சுரேஸ்

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்ககளும் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் உட்பட தொழில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆரம்பிக்கபட்டன. அவைகள் தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவையும் பெற்று வருகின்றனர். அரசியலையும் நடாத்தி வருகின்றனர். இந் நிலையில் இவர்கள் தொழிலாளர்கள் சார்பான வேலைகளையும் உரிமைகளையும் பெற்று கொடுக்க வேண்டியதும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானது. இந் நிலையில் இவர்கள் எங்களிடம் பொருப்பு என்று தப்பித்துக் கொள்ளவும் முடியாது.

தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன் வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625.00 ரூபாவும் இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபா அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபா வரவு கொடுப்பனவும் 30.00 விலை கொடுப்னவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலே ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்துள்ளனர். இது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் ஒரு படி உயர்வாக இருந்த போதும். இதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதனை பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் கூறி அவர்களின் முடிவின் படி அடுத்த கட்டத்திற்கு செல்லாம் என்று என்னி எழும்பி வந்து விட்டோம். இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முடிவும் அதுவே.
எது எவ்வாறாயினும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்ககளும் ஒன்றினைந்து செயற்பட்டு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். இந் நிலையில் தொழிற்சங்கங்கள் முறனாக கருத்து தெரிவிப்பது கவலைக்குறிய விடயமாகும் என்று கூறினார். என்று கூறினார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.