SHARE THIS NEWS please, THANK YOU
............................

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரிபிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனா தோப்புகுதியில் சந்தேகத்து இடமாக மனித எச்சங்கள் சில இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை இனங்கண்ட பொதுக்கள் குறித்த கையடக்க தொலைபேசியினை பொலிஸாருக்கு ஒப்படைத்ததை முன்னிட்டு தொலைபேசியில் உள்ள தகவல்களுக்கு அமைய ஆரம்பிக்கபட்ட விசாரணைகளின் போது இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனித எச்சங்களை பொகவந்தலாவ பொலிஸார் இனங்கண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது