கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்

கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

MT4 Platforms

இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published.