SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று நடந்த சந்திப்பு முழுமையான திருப்தியளித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய விடயங்கள் என கருதப்படுபவற்றை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் இதன்போது கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கோட்டாபய ஆர்வம் காட்டி விருப்பு வெளியிட்டுள்ளமையை வரவேற்கிறோம் என ஈ.பி.டி.பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது