SHARE THIS NEWS please, THANK YOU
............................

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில், க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறுகின்ற விசேட வகுப்புக்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து பாதுகாக்க கூடிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாத்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மண்ணெண்ய் மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும் அலுவலகத்திற்குள் காணப்பட்டுள்ளது.

MT4 Platforms