SHARE THIS NEWS please, THANK YOU
............................

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்களான விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஒயின் போன்றவை அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் விற்கப்படுகிறது.

கேரளாவில் மதுபானங்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 270 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளது. வார இறுதி நாட்களில் இங்கு மதுபான விற்பனை களை கட்டும்.

MT4 Platforms

இது தவிர முக்கிய பண்டிகை நாட்களிலும் மதுபான விற்பனை அமோகமாக நடக்கும். குறிப்பாக ஓணம் பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை தொடங்கிய நாள் முதல் மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை அமோகமாக நடந்தது.

கடந்த 3-ந்தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான 10-ந்தேதி வரை 8 நாட்களில் ரூ.487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. 10-ந்தேதி மட்டும் ரூ.90.30 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இரிஞ்சாலகுடாவில் உள்ள கடையில் மட்டும் ரூ.1.22 கோடிக்கு மது விற்பனையானது சாதனையாக கூறப்பட்டது.

மது விற்பனை

கேரளாவில் கடந்த ஆண்டு இதே 8 நாட்களில் மதுபான விற்பனை ரூ.457 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.30 கோடி அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு மதுபான விற்பனை குறைவிற்கு பேய் மழையும் காரணம் என்று கூறப்பட்டது. இந்த ஆண்டும் கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின்னரும், மதுபான விற்பனை மட்டும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு அந்த தடையை நீக்கியது. இதனால் மது பார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள் படிக்க :