கூடத்தில் கதிரைகளுடன் பேசிய அமைச்சர்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனில் நடைபெற்ற ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற கருத்தரங்கில் பாகிஸ்தான் மந்திரியின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்ததால் காலி நாற்காலிகளுடன் அவர் பேசிச் சென்றார்.

சர்வதேச ஊடகங்கள் புறக்கணிப்பு – காலி நாற்காலிகளுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் மந்திரி
காலியாக கிடந்த அரங்கம்
லண்டன்:

பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன், கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் விருந்தினர்களாக பங்கேற்றனர்.

MT4 Platforms

பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி

இந்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் திடீரென கோஷம் எழுப்பினார் .

மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் .

இதனால், கோபமடைந்த ஷா முகமது குரேஷி, பாகிஸ்தான் நாட்டில் எந்த ஊடக சுதந்திரமும் பறிக்கப்படவில்லை. மேலும், யாருடைய தனிப்பட்ட டுவிட்டர் கணக்கையும் அரசு முடக்கவில்லை என மறுப்பு தெரிவித்து அந்த பத்திரிக்கையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடர்பாக இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது குரேஷியின் பேச்சுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அனைத்து நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் என யாரும் இல்லாத அரங்கத்தில் காலியாக கிடந்த நாற்காலிகளை வெறித்துப் பார்த்தவாறு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தனியே உரையாற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.