காவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் – ராகுல்

காவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் – ராகுல்

ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தனது வருத்தத்தை தெரிவித்தார். இனி எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் கோர்ட்டு உத்தரவை குறிப்பிடமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

easy way earn money click here,greate account

அதே நாளில் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “மே 23-ந் தேதி தாமரை ‘பிராண்டு’ காவலாளி (பிரதமர் மோடி) தான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு முடிவு செய்யும். நீதி நிலைநிறுத்தப்படும். ஏழைகளின் பணத்தை திருடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியவர் தண்டனையை சந்திப்பார்” என்று கூறியுள்ளார்.

அமேதியில் நேற்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது கூறியதாவது:-

பிரதமர் மோடி நேர்மையானவராக இருந்தால், ரபேல் ஒப்பந்தத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால் அவர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க பயப்படத் தேவையில்லை. அவர் என்னுடன் 15 நிமிடம் மட்டும் அவர் முடிவு செய்யும் இடத்திலேயே நேருக்கு நேர் விவாதிக்கட்டும். பின்னர் நாட்டு மக்கள் காவலாளியின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்வார்கள்.

இந்த பிரச்சினை குறித்து வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், பிரதமர் உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமேதி, ரேபரேலி உள்பட உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, 2014-ம் ஆண்டு ‘நல்ல நாள் வரும்’ என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பிரசாரம் காவலாளி என்று கூறினார். உடனே கூட்டத்தினர், திருடன் என குரல் எழுப்பினர். தொடர்ந்து, அமேதியில் 150 தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட உணவு பூங்கா மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார்

Leave a Reply

Your email address will not be published.