காங்கிரஸ் எம்பி சசிதரூர் உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பான பணிகளில் தேர்தல் கமிஷனும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூருக்கு நெருங்கிய உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்
காங்கிரஸ் எம்பி சசிதரூர் உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்

பாலக்காட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் உறவினர்களான சோபனா சசிகுமார் மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோர் பாஜக ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இன்று கொச்சியில் உள்ள அலுவலகத்தில் மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னர் அக்கட்சியில் இணைந்தனர்.

டெல்லி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் நேற்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

MT4 Platforms

Related Post