கவர்ச்சிக்கு மாறும் நடிகை

மலையாள படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து, படத்தின் ரிலீசுக்கு முன்பு வெளியான பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானாராம் அந்த நடிகை. குறிப்பாக அவரது கண்சிமிட்டல் சமூக வலைதளங்களையே ஆட்கொண்டதாம்.

அதன்பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்காமல் இருந்தாராம். இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். சமீபத்தில் மறைந்த பிரபல நடிகையின் பெயரில் தொடங்கும் பங்களா என்றும் அதற்கு தலைப்பு வைத்துள்ளார்களாம்.

பேய் படமாக உருவாகும் இதில் நாயகி கவர்ச்சி தோற்றத்தில் நடிக்கிறாராம். நல்லா போயிட்டு இருக்கும் போது, நாயகி ஏன் கவர்ச்சியை தேர்வு செய்தார் என்று மல்லுவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்

MT4 Platforms

Related Post