கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும்

முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும்,

MT4 Platforms

எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும்

திமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு இனி விடியட்டும்!

திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும்

எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும்,

கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும்

சிந்திய துளி இரத்திற்கெல்லாம் நீதி கிட்டும் வரைப் இனி போராட்டம்!!

வெண்சங்கு முழங்கட்டும்

தமிழா விழி விழியென யெம் பறை ஒலிக்கட்டும்,

நீதி கேட்டு சொற்கள் அறையட்டும்

நெற்றிப் பொட்டிலும் நேர்மையே தெறிக்கட்டும்!

எத்தனை மார்புகள் வேண்டும் விரியட்டும் விரியட்டும்

அவர்கள் சுடட்டும், நெஞ்சு நிமிர்த்தி நில் தாங்கட்டும்,

ஒரு தமிழச்சி, தமிழ்மண் காக்க

எம்முயிர் வேண்டுமோ; கொண்டு மூடட்டும்!

சடுசடுவென சுட்ட கூட்டம்; இனி எம் மண்ணில்

தலைக் காட்டாமல் நில்லட்டும்! குத்தி குத்தி

உயிர்க்கொன்ற கொண்டாட்டம் இனி

இறுதியென்றுச் சொல்ல எம் இளைஞர் கூட்டம் வெகுண்டெழட்டும்!

நடுநடுங்க ஓடட்டும் சதி தீர தூர ஒழியட்டும்

சட்டங்கள் திருந்தட்டும் திருத்தங்கள் வெல்லட்டும்,

திபு திபுவென கொன்ற வெறியாட்டம் இனி

அடியடியென அடிக்க ஓயட்டும்!

மூடுங்கள் மனக்கதவுகளை இனி

அறிவு கொஞ்சம் விழிக்கட்டும்,

மூடாத தொழிற்கழிவுகள் ஒழியட்டும், பிறர்

தந்திரங்கள் மொத்தமும் தோற்கட்டும்!

மண் மெல்ல சுவாசிக்கட்டும்

வசந்தம் மீண்டுமெமெக்கு வரட்டும்,

நாடு நாடு அது நமக்காகட்டும், வீடு அரசியல் லட்சியமெல்லாம்

எம் விடுதலை விடுதலையொன்றே மூச்சாகட்டும்!!

வித்யாசாகர்


வித்யாசாகர்
மாதவரம், சென்னை
வாட்சப் செய்ய – 09840502376
பேச – +965 97604989

Leave a Reply

Your email address will not be published.