SHARE THIS NEWS please, THANK YOU
............................

மோசடியான முறையில் கனடாவிற்கு ஆறு பேரை அழைத்து சென்ற குற்றச்சாட்டில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னாள் செயலாளரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சந்தேகநபர், ஜோன் அமரதுங்கவின் நெருங்கிய உறவினர் என்பதும், மோசடியான முறையில் அமைச்சரின் கையெழுத்தை தாவித்தே ஆறு பேரை கனடாவிற்கு அழைத்து சென்றார் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த முன்னாள் செயலாளர் கனடாவில் நடைபெறும் விழாவிற்கு அழைத்து செல்லும் போர்வையில், சுற்றுலா அமைச்சகத்துடன் இணைக்கப்படாத ஒரு குழுவினரை அழைத்து சென்று பெருமளவு பணத்தை ஈட்டியுள்ளார். அமைச்சின் உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலின் பேரில், மோசடி புலனாய்வு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

MT4 Platforms

அமைச்சின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பாமல், பிரதிநிதிகளின் பெயரில் ஆட்கடத்தலே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சு சார்பில் யாரும் கலந்து கொள்ளாததால் கனடாவில் உள்ள இலங்கை தூதரும் தர்மசங்கடத்தில் உள்ளானார்.