கட்டிடம் இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கட்டிடம் இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

MT4 Platforms

தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதற்கிடையே, கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 6 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கட்டிடம் இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இதுதொடர்பாக தார்வாட் போலீசார் கூறுகையில், கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆனது. இடிபாடுகளில் சிக்கிய 55க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளோம். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.